எணணூர் அனல் மின் நிலையம் வளாகத்தில் உள்ள கிணற்றில் எருமை மாட்டு கன்று குட்டி ஒன்று விழுந்து உயிருக்கு போராடி இருப்பதை அப்பகுதியில் சேர்ந்தவர்கள் எண்ணூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் உடனடியாக எண்ணூர் நிலைய அலுவலர் முரளி.தலைமையில் ஐந்துக்கு மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து

கன்று குட்டியை மீட்பதற்கு முயற்சி செய்தனர் முடியாத நிலையில் ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து உள்ளே இறங்கி கயிறு கட்டி பத்திரமாக கன்று குட்டியை உயிருடன் மீட்டனர் இதில் குறுகலான கிணற்றில் தவறி விழுந்ததால் லேசான காயமடைந்த கன்று குட்டிக்கு முதல் உதவி அளித்தனர்.


இதேபோன்று கடந்த வாரமும் கன்று குட்டி ஒன்று இதே பகுதியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிருக்கு போராடி இருந்த நிலையில் அதனைக் காப்பாற்றிய தீயணைப்பு துறையினர்.
இந்த பகுதியில் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *