எண்ணூர் காவல் உதவி ஆணையர் திரு வெங்கட் குமார் தலையிட்டு கேஸ் சிலிண்டர் நிரம்பிய லாரியை வெளியேற்றி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வந்தார் .
சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலம் 4வது வார்டில் அமைந்துள்ளது முல்லை நகர். இப்பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். மக்கள் நெருக்கமாக வசிக்கும் இப்பகுதிக்குள் பாலாஜி கேஸ் ஏஜன்சி விநியோக குடோன் அமைக்க கடந்த நான்காண்டுகளாக முயற்சித்து வருகின்றனர்.
நான்காவது வார்டு மாமன்ற உறுப்பினர் தோழர் ஜெயராமன் அவர்களது வழிகாட்டலில் அப்பகுதியில் கேஸ் குடோன் அமையா வண்ணம் தொடர்ந்து தடுத்து நிறுத்தப்பட்டு வருகிறது. ஆனாலும் அந்த கேஸ் ஏஜென்சி பல்வேறு துறைகளை சந்தித்து NOC பெற்றதாக பொய்களைக் கூறி PESO லைசன்ஸ் வழங்கியுள்ளதாக கூறி நேற்றைய தினம் 21 செப்டம்பர் 2026 அன்று காலை லாரி நிறைய கேஸ் சிலிண்டர்களை கொண்டு வந்து அந்த குடோனில் நிறுத்தியது. முல்லை நகர் நிர்வாகிகள் காவல்துறையை அணுகி புகார் செய்தனர். புகாரின் அடிப்படையில் முல்லை நகர் நிர்வாகிகளையும் கேஸ் ஏஜென்சி நிறுவனத்தையும் ஆய்வாளர் திரு விஜயகுமார் அவர்கள் அழைத்து பேசியுள்ளார்.
ஆனால் கேஸ் ஏஜென்சி நிறுவனத்தை சார்ந்தவர்கள் லைசன்ஸ் பெற்று விட்டோம் என்று வாய் மூலம் சொல்லுகிறார்களே ஒழிய எந்த ஆதாரத்தையும் நேரடியாக கொண்டு வரவில்லை. முல்லை நகர் நிர்வாகிகள் கடந்த நான்கு ஆண்டுகளாக நீதிமன்றத்தை நாடியது. PESO, மாநகராட்சி ஆணையர், மண்டல அலுவலர், தீயணைப்பு துறை | காவல் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என அனைத்து துறைகளுக்கும் தங்கள் எதிர்ப்பினை பதிவு செய்யும் வகையில் புகார் மனுவை கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பாகவே வழங்கி உள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில் வழக்கில் ஆஜரான PESO நிர்வாகம் நாங்கள் லைசன்ஸ் வழங்கவில்லை என்று சொன்னதால் நீதிமன்றம் லைசென்ஸ் வழங்காத நிலையில் அங்கு அமையாது. எனவே வழக்கை தள்ளுபடி செய்கிறோம். ஒருவேளை அப்படி லைசன்ஸ் வழங்கி அங்கே LPG கேஸ் குடோன் அமைந்தால் அப்போது நீதிமன்றத்தை அன்றும். என்று கூறி வழக்கை முடித்து வைத்தது.
ஆனாலும் அந்த கேஸ் ஏஜென்சி நிறுவனம் தொடர்ந்து பல அதிகாரிகளிடம் கையூட்டு கொடுத்தும், அரசியல்வாதிகளை பயன்படுத்தியும் அங்கே மீண்டும் மீண்டும் சிலிண்டர்களை கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டது.
மக்கள் தொடர் எதிர்ப்பின் காரணமாக காஸ் சிலிண்டர் குடோன் அமைக்கும் முயற்சி தடுத்து நிறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு அதே நிறுவனம் கேஸ் சிலிண்டர்கள் நிரப்பிய லாரியை கொண்டு வந்து அந்த குடோனுக்குள் நிறுத்தியது. அங்கிருந்து சிலிண்டர்களை விநியோகம் செய்யும் பணியை துவக்கியது. காவல்துறையில் முறையிட்டபோதும் காவல்துறை இருவரையும் அழைத்து பேசி அவர்கள் கேஸ் சிலிண்டர்களை இங்கு வைக்க மாட்டார்கள். என்று சொன்னார்.
கேஸ் சிலிண்டர் விநியோகம் செய்யக்கூடாது. இருக்கும் லாரியை அகற்ற வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
லாரி அந்த குடோனுக்குள்ளேயே நின்றிருந்தது. முல்லை நகர் மக்கள் திரண்டு மாமன்ற உறுப்பினர் ஜெயராமன் அவர்களுக்கும் தகவல் கொடுத்து அந்த கேஸ் சிலிண்டர் லாரி வெளியேற்றும் வரை காத்திருப்பு போராட்டம் நடத்துவோம் என அறிவித்தனர். முல்லை நகர் கோயில் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் அமர்ந்து காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எண்ணூர் காவல் உதவி ஆணையர் திரு வெங்கட் குமார் அவர்கள் நேரடியாக வந்து உடனே அந்த லாரியை வெளியேற்றினார்.
காத்திருப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது மாமன்ற உறுப்பினர் உதவி ஆணையர் அவர்களுக்கு மக்கள் சார்பாக நன்றி தெரிவித்தார். கேஸ் குடோன் மக்கள் வசிக்கும் பகுதிக்குள் வைக்கக்கூடாது என்று விதி இருந்த போதும் அரசு அதிகாரிகள் நேரடியாக வந்து ஆய்வு செய்யாமல் ஆய்வு செய்ததாக பொய்யாக தகவல்களை தெரிவித்து லைசன்ஸ் கொடுத்ததாக பொய்யான தகவல் கொடுத்து கேஸ் குடோன் வினியோகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்ட பாலாஜி கேஸ் ஏஜென்சியை மாமன்ற உறுப்பினர் கண்டனம் எழுப்பினார். கேஸ் சிலிண்டர் நிரப்பிய லாரி வெளியேற்றப் பட்டவுடன் மக்கள் கலந்து சென்றனர் இப் போராட்டத்தில் முல்லை நகர் நல சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் செயலாளர் பழனிச்சாமி துணை தலைவர் பொன்னம்பலம் சங்கர் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றார்கள்.