தேனி மாவட்டம் கம்பம் நகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள இப்பகுதி மக்களின் நன்மதிப்பைப் பெற்ற மிகச்சிறந்த கல்வி நிறுவனமான முகைதீன் ஆண்டவர் புரம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவு திட்டத்தை கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவை ருசித்துப் பார்த்தார்
இந்த நிகழ்ச்சியில் நகர்மன்ற துணைத்தலைவர் சுனோதா செல்வகுமார் நகராட்சி ஆணையாளர் உமா சங்கர் மூத்த வழக்கறிஞர் துரை நெப்போலியன் பள்ளி தலைமை ஆசிரியர் ஆரோக்கியம்மாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சாதிக் அலி, சர்புதீன், சாகிதா பானு, அன்புகுமாரி மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.