“மாட்டுக்கறி உரிமை என்றால் பன்றிக் கறியையும் மெனுவில் சேருங்கள்” ; விடுதி உணவுப் பட்டியலில் வி.சி.க வன்னியரசுவுக்குக் கிஷோர் குமார் பதிலடி!

சர்ச்சைக்குரிய வகையில் செயல்படுவதாகக் குற்றச்சாட்டு !

பயங்கரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும்” ; கோவையில் சசிகுமார் 10-ஆம் ஆண்டு நினைவேந்தல் கூட்டத்தில் இந்து முன்னணி அதிரடி!வழக்குகளை விரைந்து முடிக்கக் கோரிக்கை: மாநிலப் பொதுச்செயலாளர் கிஷோர் குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் ஆவேசம்!

“தமிழகத்தில் பயங்கரவாதம் வேரோடும் மண்ணோடும் அழிக்கப்பட வேண்டும்; சசிகுமார் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் கடந்தும் வழக்கு விசாரணை நிலையிலேயே இருப்பது வேதனை அளிக்கிறது” என இந்து முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் கிஷோர் குமார் கோவையில் தெரிவித்து உள்ளார்.

கோவை, குனியமுத்தூர் பகுதியில் இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் மறைந்த சசிகுமாரின் 10-ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் இந்து முன்னணியின் மாநிலப் பொதுச்செயலாளர் கிஷோர் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

​இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது;

​”தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் நூற்றுக் கணக்கான இந்து அமைப்பின் நிர்வாகிகளும், காவல்துறை அதிகாரிகளும் பயங்கரவாத அமைப்புகளால் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். சசிகுமார் படுகொலை செய்யப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு அடைந்த நிலையிலும், வழக்கு இன்னும் விசாரணை நிலையிலேயே உள்ளது.​காவலர் செல்வராஜ் படுகொலை வழக்கு நீர்த்துப்போய் விட்டது, எஸ்.ஐ. வில்சன் வழக்கு நிலுவையில் உள்ளது.

குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை உடனடியாகக் கிடைக்காததாலேயே, இதுபோன்ற வன்முறை மனநிலை தொடர்ந்து நீடிக்கிறது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் ‘பாரத் மாதா கி ஜெ’ என முழக்கமிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட சம்பவமே இதற்குச் சான்று.”

கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் தண்டனை பெற்றவர்கள் விடுதலை செய்யப்படுவதையும், ஆயுள் தண்டனைக் கைதிகளின் இறுதி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படுவதையும் சுட்டிக்காட்டிய அவர், “குண்டுவெடிப்பில் பலியான 58 பேரின் குடும்பங்களுக்கும், காயம் அடைந்தவர்களுக்கும் இன்னமும் ஆறாத வடுவாகவே இந்த வேதனை நீடிக்கிறது.

பயங்கரவாதச் செயல்களுக்கு எதிராகவே இந்த நினைவேந்தல் கூட்டங்களை நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்” என்றார்.​
​”இந்து சமுதாயத்தில் உள்ள ஜாதி பாகுபாடுகளையும், ஏழை-பணக்காரன் என்ற வேற்றுமைகளையும் களைவதற்காகவே மறைந்த ராமகோபாலன் ஐயா விநாயகர் சதுர்த்தி ஊர்வலங்களை முன்னெடுத்தார். அனைவரும் இந்து என்ற உணர்வோடு ஒன்றிணையவே இவ்விழாக்கள் நடத்தப்படுகின்றன” எனப் பதிலளித்தார்.

​ “சமூக நல விடுதிகளில் மாட்டு இறைச்சி வழங்குவது உணவு உரிமை என்று கூறப்பட்டால், பன்றி இறைச்சி உண்ணும் மாணவர்களின் உரிமையையும் மதித்து அதையும் உணவில் சேர்க்க முன் வர வேண்டும்” எனக் கருத்துத் தெரிவித்தார்.

​இந்நிகழ்ச்சியில் இந்து மாவட்ட தலைவர் தசரதன் தலைமை தாங்கினார். மாவட்டத் துணைத் தலைவர் பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் கிஷோர் குமார் சிறப்புரையாற்றினார். மாநில நிர்வாக குழு உறுப்பினர் சதீஷ், கோவை கோட்ட பொதுச் செயலாளர் மாவட்ட செய்தி தொடர்பாளர் தனபால், மாவட்ட செயலாளர்கள் ஜெய்சங்கர், ஆறுச்சாமி, மகேஸ்வரன், போத்தனூர் ஆனந்த், மாவட்ட செயற்குழு உறுப்பினர் விக்னேஸ்வரன், வேடப்பட்டி ஆனந்த் மற்றும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாவட்ட, நகர இன்றைய மற்றும் பொதுமக்கள் பெண்கள் கலந்து கொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *