நாகப்பட்டினம்,செப்.22-
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் சென்னை திருவான்மியூர் காந்தி கிராமத்தில் உள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்.
அதனையொட்டி, நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் ஒன்றியம் நரிமணம் அரசு உயர்நிலைப்பள்ளியில், பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜவகர் தொடங்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு அருந்தினார். இதில் பள்ளி தலைமை ஆசிரியர் சுரேந்திரன் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ஹரிகிருஷ்ணன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்வாணன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.