நாகப்பட்டினம்
நாகை மாவட்டம் திட்டச்சேரி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளிலும் பேரூராட்சி டெங்கு பணியாளர்களுடன் சுகாதார பணியாளர்களும் இணைந்து டெங்கு காய்ச்சலைத் தடுக்க தூய்மைப் பணிகளும் தீவிர விழிப்புணர்வு நடவடிக்கைகளும் வீதிகள்தோறும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முக்கிய தடுப்பு நடவடிக்கையாக கழிவுநீர் அகற்றுதல், தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்துதல், கொசு ஒழிப்பு மருந்து தெளித்தல், வீடுகளில் பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள் மற்றும் திறந்த பாத்திரங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளும் பணியில் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

மேலும் வீடுகளுக்கும் சென்று, அங்கு உள்ள தண்ணீர் தேங்கும் பகுதிகள், சுகாதாரமற்ற இடங்கள் என்று ஆய்வு செய்து சுகாதாரமாக வைத்திருக்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தினர். மேலும் சுகாதாரமற்று வீடுகளை வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தனர். திட்டச்சேரி பேரூராட்சி செயல் அலுவலர் கலியப்பெருமாள் தலைமையிலும், இளநிலை உதவியாளர் சாமிநாதன் முன்னிலையிலும் சுகாதார பணிகள் நடைபெற்றன.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *