துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் சுமார் 30 கொசு ஒழிப்பு களப்பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தினந்தோறும் ஒவ்வொரு வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகளில் கொசுப்புழுக்கள் உற்பத்தியை கண்டறிந்து அகற்றுவதற்கும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு வழங்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து 22-09-2026 அன்று துறையூர் நகராட்சி 8வது வார்டில் உள்ள பெரியார் நகர் மற்றும் சாமிநாதன் நகர் தெருக்களில் உள்ள வீடுகளில் நடைபெற்ற கொசுப்புழு ஒழிப்பு மற்றும் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகளை துறையூர் நகராட்சி நகர்மன்ற தலைவர் செல்வராணி மற்றும் ஆணையர் கண்ணன் ஆகியோர் நேரடி கள ஆய்வு மேற்க்கொண்டனர். ஆய்வில் பொது மக்களுக்கு கொசு ஒழிப்பு குறித்த விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டது.


நகர்மன்ற தலைவர் அளித்த செய்தி குறிப்பில்,
தற்போதைய பருவநிலை மாற்றம் காரணமாக பொதுமக்கள் கவனமாக இருக்குமாறும் கொசு உற்பத்தியை தடுக்க தங்களது வீடுகளில் சேகரித்து வைக்கும் தண்ணீரை கொசுக்கள் புகாத வண்ணம் மூடி வைக்கவும் மற்றும் தங்களது வீட்டினைச்சுற்றி உள்ள தேவையற்ற பொருட்களை மழைநீர் தேங்காத வகையில் அகற்றுமாறு தெரிவித்தார்.

தங்களது வீடுகள் தேடி வரும் கொசு ஒழிப்பு களப்பணியாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிடுமாறு கேட்டுக்கொண்டார்.மேலும், கொசு உற்பத்தி கண்டறியப்படும் புதிய கட்டிடங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளின் மீது உரிய அபராதம் மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *