மாவட்ட செய்தியாளர் முகமது இப்ராஹிம்
தென்காசி செப்டம்பர் 23-
தென்காசி மாவட்ட Whetheleaders அமைப்பின் சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் மரக்கன்றுகள் வழங்கும் விழா செங்கோட்டை தாலுகா காரணம் அருகே நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாக பொதுமக்களிடையே மரம் வளர்ப்பதன் அவசியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 2,000 மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டன. பொதுமக்கள் மரக்கன்றுகளை பெற்றுச் சென்று தங்கள் பகுதிகளில் நட்டு முறையாக பராமரிக்க வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் வலியுறுத்தினர்.
மேலும், அமைப்பில் புதிய உறுப்பினர்களை இணைக்கும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாமும் நடைபெற்றது. இதில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு மற்றும் சமூக நலப் பணிகளில் பொதுமக்களின் பங்களிப்பு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியை மாடசாமி என்ற சாமி, புதூர் வசந்தகுமார் ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
நிகழ்ச்சியில் Whetheleaders அமைப்பின் சார்பில் அன்புராஜ், டாக்டர் லெனின் ராமமூர்த்தி, கனிராஜ், மாரியப்பன், முத்துப்பாண்டி, பட்டவராயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மரம் வளர்ப்போம்… மழை பெறுவோம்… சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!