கோவை

லெனின் பாண்டியன் திரைப்படம் மக்களின் வாழ்வியலைப் பேசும் படம் – படக்குழுவினர் பேட்டி.

இயக்குநர் பாலசந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள லெனின் பாண்டியன் திரைப்படக்குழுவினர் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது நாடகப் பயிற்சிக்குப் பிறகு திரைத்துறையில் நடிக்கும் வாய்ப்பு தனக்குக் கிடைத்துள்ளதாகக் கூறிய நடிகர் தர்ஷன், சென்னையில் பிறந்து வளர்ந்த தனக்கு கிராமத்துக் கதாபாத்திரத்தில் நடித்துத் திறமையை வெளிப்படுத்த ஒரு சவாலான வாய்ப்பாக இப்படம் அமைந்தது என்று தெரிவித்தார். மேலும், மூத்த கலைஞர்களுடன் இணைந்து நடித்தது மிகச் சிறந்த அனுபவம் என்றும், மக்களின் வாழ்வியலைப் பேசும் இக்கதை நிச்சயமாகப் பார்வையாளர்களுடன் எளிதில் ஒன்றிப்போகும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இது குறித்து கங்கை அமரன் கூறும் போது : இத்திரைப்படம் திரையரங்கில் ஒரு சாதாரண படத்தைப் பார்ப்பது போன்ற உணர்வைத் தராமல், ஒரு கிராமத்து மனிதர்களின் உண்மையான வாழ்க்கையைப் பார்த்துவிட்டு வருவது போன்ற உணர்வைத் தரும் என்றார். நாட்டுப் பிரச்சனை, மக்கள் மற்றும் அதிகாரிகளின் செயல்பாடுகள் என அனைத்தையும் அழகாகப் பேசும் கதையாக இது உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இசைஞானி இளையராஜா அவர்களின் இசையில் பாடல்கள் மிக அற்புதமாக அமைந்துள்ளதாகப் பாராட்டினார். தொடர்ந்து, இப்படத்தின் தயாரிப்பாளர் சக்திதேவி மற்றும் இயக்குநர் பாலச்சந்திரன் ஆகியோருக்குத் தனது நன்றியையும் தெரிவித்துக் கொண்டார்.


திரையுலகினரின் அரசியல் வருகை குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த தர்ஷன், நடிகர் விஜய் மக்களுக்குச் சேவை செய்யும் நல்ல எண்ணத்துடனே அரசியலில் களமிறங்கியுள்ளார் என்றார். மேலும் இளையராஜாவின் இசைப்பயணம் குறித்துப் பேசுகையில், கடின உழைப்பிற்கான பலன் நிச்சயமாகக் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகப் படக்குழுவினர் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *