தூத்துக்குடி மாநகராட்சி மக்களுக்கு அதிசயத்துடன் கூடிய துறைமுகம் கடற்கரை பொழுதுபோக்கு பூங்கா ஜனவாி முதல் பயன்பாட்டிற்கு வரும் மேயா் ஜெகன் பொியசாமி தகவல்
தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட புதிய துறைமுக கடற்கரைப் பகுதியில் துறைமுகத்துக்கு சொந்தமான இடம் உள்ளது அதில் சில ஏக்கா் இடம் மாநகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது
மேலும் அந்த இடத்தில் பூங்கா அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. அதற்காக வெளி மாநில பல்வேறு நிபுணர்களை பல மாதங்களாக அழைத்து எப்படி அமைப்பது என்னென்ன வசதிகள் செய்வது என்று ஆலோசனை செய்யப்பட்டு அதற்கான வரைபடங்கள் தயாரிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சுமார் 8 கோடி மதிப்பில் பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது.
தற்போது அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பூங்காவில் நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் நிறுத்துவதற்கான வசதிகள் 500க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது
பூங்காவிற்கு செல்வதற்கு இருபுறமும் வாசல் அமைக்கப்பட்டுள்ளது. பூங்காவில் நவீன வசதிகளுடன் செல்பி பாயிண்ட் உருவாக்கப்படுகிறது. நவீன வசதிகளுடன் கூடிய ஊஞ்சல். பூங்காக்கள். திறந்தவெளி அரங்கம். மேலும் வெளிநாட்டில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்படுகிறது
இது முழுக்க முழுக்க பொதுமக்கள் பொழுதுபோக்கும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய பூங்கா அமைக்கப்படுகிறது. இந்தப் பூங்காவில் சிறிய நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது மேலும் குழந்தைகளுடன் அமர்ந்து உணவு அருந்துவதற்காக நான்கு உணவகங்கள் அமைக்கப்படுகிறது.
இந்நிலையில் இப்பணிகளை மேயா் ஜெகன் பொியசாமி பாா்வையிட்டு ஆய்வு செய்த பின் கூறுகையில் இந்த இடம் துறைமுகத்துக்கு சொந்தமான இடம் மாநகர மக்களுக்கு பல்வேறு பொழுதுபோக்கும் வசதிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் துறைமுக சபையுடன் இணைந்து மாநகராட்சி பகுதி மக்களுக்கு பல்வேறு வசதிகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் முத்துநகர் கடற்கரை பல வசதிகள் செய்யப்பட்டிருந்தாலும் துறைமுகத்தில் நவீன வசதியுடன் கூடிய பூங்கா அமைக்கப்படுகிறது
கடந்த இரண்டு வருட காலமாக இந்த பணி நடைபெற்று வருகிறது பணிகள் நடைபெற்று வரும் போது சில இடம் பிரச்சனை தொடர்பாக இடையூறுகள் ஏற்பட்டது. பணிகள் முடிவடையும் தருவாயில் உள்ளது திறந்தவெளி ஆடிட்டோரியம் அமைக்கப்படுகிறது. சென்னையில் எங்கெல்லாம் பீச் உள்ளதோ அங்கு எப்படி அமைக்கப்பட்டுள்ளதோ அதைவிட நவீன வசதியுடன் இங்கு அமைக்கப்படுகிறது
விளையாட்டு சாதனங்கள் இன்னும் நிறைய வர வேண்டியுள்ளது செல்பி பாயிண்ட் கலாச்சாரத்தை குறிக்கும் வகையில் இங்கு அமைக்கப்பட்டுள்ளது இங்கு அமைக்கப்படுகின்ற பொருட்கள் எல்லாம் இம்போர்ட் கொள்முதல் செய்யப்பட்டு அமைக்கப்படுகிறது நான்கு கடைகள் அமைக்கப்படுகிறது வருகிற ஜனவரி மாதம் முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என்று கூறினார்.
ஆய்வின் போது மாநகராட்சி சுகாதார குழு தலைவர் சுரேஷ்குமார் மாநகராட்சி செயற்பொறியாளர் லெனின் இளநிலை பொறியாளர் செல்வம் உள்பட மாநகராட்சி அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனர்.