மதுராந்தகம்: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் வழக்கறிஞர் இ. பரந்தாமனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் நடைபெற்றது. தேர்தல் பொறுப்பாளர் அ. கோவிந்தன், சி. சுந்தர பாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்தப் பிரச்சார நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் வேட்பாளருக்கு ஆதரவு கோரப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு அனைத்து அமைப்புசாரா தொமுச மாநில பிரச்சார செயலாளர் A.A. ஆறுமுகம் கலந்து கொண்டு, மின் கட்டண உயர்வு, பால் விலை மற்றும் சமையல் எண்ணெய், சர்க்கரை, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு குறித்து பொதுமக்களிடையே பேசினார்.
மேலும், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் விலை உயர்வுகள் தொடர்பாக தங்களது கருத்துகளை தெரிவித்த அவர், தேர்தல் தொடர்பான ஆதரவை கோரி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
நிகழ்ச்சியில் பணிக்குழு உறுப்பினர்கள் எஸ். எழில்மாறன், மு. சீனிவாசன், ஊராட்சி மன்றத் தலைவர் என். சிவா, கிளைச் செயலாளர் எஸ். சம்பத், BLA-2 ஆர். கிருஷ்ணமூர்த்தி, ஆர்.சி. மூர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள், கட்சியினர் மற்றும் ராஜபாளையம் கிளை பொதுமக்கள் கலந்து கொண்டனர்