கேபிஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் உலக புகைப்பட தின விழா கோலாகலமாக நடைபெற்றது-கேபிஆர் கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில், உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு சிறப்பான புகைப்படக் கண்காட்சி மற்றும் பல்வேறு புகைப்படம் சார்ந்த நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி. கீதா அவர்கள் தலைமை தாங்கினார்.

நிகழ்ச்சியின் முக்கிய சிறப்பம்சமாக நடைபெற்ற புகைப்படப் போட்டிக்கு, சினிமாட்டோகிராபர் அஸ்வின் கே. மற்றும் ஃபோட்டோகிராஃபர் மரியா ஜோச்ஃபின் ஆகியோர் நடுவர்களாகப் பங்கேற்று, மாணவர்களின் படைப்புகளை மதிப்பீடு செய்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்று, தங்களது புகைப்படத் திறமைகளையும் படைப்பாற்றலையும் வெளிப்படுத்தினர். மாணவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையிலும், புகைப்படக் கலையின் மீதான ஆர்வத்தை வளர்க்கும் வகையிலும் இந்நிகழ்ச்சி அமைந்தது.

புகைப்படக் கலை மற்றும் ஊடகத் துறையின் முக்கியத்துவத்தை மாணவர்களிடையே எடுத்துச் செல்லும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பிக்ஸ் போட்டோகிராபி அண்ட் மீடியா டீம் சிறப்பாக மேற்கொண்டது.

உலக புகைப்பட தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த விழா, மாணவர்களின் படைப்பாற்றலையும் புகைப்படக் கலையின் மீதான ஆர்வத்தையும் வெளிப்படுத்தும் வகையில் சிறப்பாக அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *