தேனி மாவட்டத்தில் உள்ள தேனி அல்லிநகரம் பெரியகுளம் போடிநாயக்கனூர் கூடலூர் கம்பம் சின்னமனூர் ஆகிய 6 நகராட்சிகள் உள்ளன தமிழகத்தில் உள்ள நகராட்சி பகுதிகளில் உள்ள சொத்து வரிகளை முதல் 6 மாதம் முடிவதற்குள் செலுத்தினால் 5 சதவீதம் வரிச்சலுகை வழங்கப்படும் என முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக அரசு அறிவித்துள்ளது

உதாரணமாக சொத்து வரி ரூபாய் 10 ஆயிரம் என்றால் அந்தத் தொகையை முன்கூட்டியே வரி செலுத்துவதால் ரூபாய் 500 குறைவாக செலுத்தலாம் இது குறித்து நகராட்சி ஆணையாளர்கள் பெரியகுளம் தமிஹா சுல்தானா தேனி அல்லிநகரம் போடிநாயக்கனூர் செல்வி எஸ் பார்கவி கம்பம் சின்னமனூர் உமாசங்கர் கூடலூர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் கூறும் போது 5 சதவீத வரிச்சலுகை பெற வரும் செப்டம்பர் 30க்கும் வரி செலுத்த வேண்டும் நகராட்சி பகுதிகளில் 30. ஆயிரத்து 710 சொத்து வரி இனங்கள் உள்ளன இதில் சுமார் 45 சதவீதத்திற்கும் மேலோனோர் இந்த வரி சலுகைகயை பயன்படுத்தி வரி செலுத்தி உள்ளனர் முன்கூட்டியே வரி செலுத்துவது பொதுமக்களுக்கு லாபகரமானது என்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *