தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. ஆனால் குறை தீர்க்கும் கூட்டத்தில் எந்த ஒரு குறைகளும் கேட்கவில்லை என்று கூறி மாற்றுத்திறனாளிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திடீரர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள் ஆர்ப்பாட்டத்தில் 25க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். என்ன செய்தியாளர்களிடம் பேர் செல் கூறுகையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது
ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர் எந்த மனுக்களும் சரியான முறையில் பெற்றுக் கொள்ளவில்லை விசாரணை நடைபெறவில்லை எந்த பதிலும் அளிக்கவில்லை பிறத்துறை அதிகாரிகளும் எந்த பதிலும் சொல்லவில்லை . குறைதீர்க்கும் முகாமில் மாற்றுத்திறனாளிகள் ஏமாற்றத்துடன் தான் சென்றுள்ளனர்
இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கக்கூடிய வீட்டுமனை பட்டா வழங்கப்படாமல் உள்ளது கடந்த மூன்று மாத காலமாக மாற்றுத்திறனாளிகளுக்கு வண்டி வழங்கப்படாமல் உள்ளது வண்டி வழங்கப்படாமல் இருக்கும் வேளையில் மீண்டும் ஒரு முகாம் நடத்தியுள்ளனர்..
ஏற்கனவே கலந்து கொண்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வண்டி வழங்கப்படவில்லை தேர்தல் வாக்குறுதியாக தமிழக முதலமைச்சர் விஜய் அறிவித்த 3500 மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை இன்று வரை அளிக்கப்படவில்லை மாற்றுத்திறனாளிகளுக்கு 1500 ரூபாய் உதவி தொகை கூட தற்போது வழங்கப்படவில்லை இது கண்டனத்துக்குரியது.
அதுபோல மற்றொரு மாற்றுத்திறனாளி கூறுகையில் மாற்றுத்திறனாளிகள் நாங்கள் எல்லோரும் ஏர்பிடிக்கிற வேலைக்கு தான் நாங்கள் சொல்கிறோம் திங்கட்கிழமை மக்கள் குறை தீர்க்கும் முகாமில் பெறப்படும் மனுக்கள் போல மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று அப்படியே சென்று விட்டார்
மனுக்களுக்கு எந்த ஒரு தீர்வும் இல்லை எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை ஒரு பத்து பேருக்காக இன்று மனுமீது தீர்வு காணப்பட்டு இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளின் வலினய அதிகாரிகள் உணர வேண்டும். மாற்ற மாற்றம் என்று கூறினார்கள் நாங்கள் எல்லோரும் மாற்றத்தை விரும்பி விசிலுக்கு தான் வாக்களித்தோம் ஆனால் எங்களுக்கு ஏமாற்றமே கிடைத்துள்ளது தமிழக முதலமைச்சர் விஜய் இதற்கு தீர்வு காண வேண்டும் என்று மற்றொரு மாற்றுத்திறனாளி கூறினார்.