முதுகுளத்தூர் செப்27:
முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் தொடக்கவிழாவும், மரக்கன்று நடும் விழாவும் நடைபெற்றது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் காலாண்டு விடுமுறையில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் நாட்டுநலப்பணித்திட்டம் சார்பில் 7 நாள் சிறப்பு முகாம் தொடங்கியது.
முதல் நாளில் (செப்26) முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப் பணித்திட்டம் சார்பில்
சிறப்பு முகாம் துவக்கவிழா மு. தூரி கிராமத்தில் நாட்டுநலப்பணித்திட்ட
மாவட்ட தொடர்பு அலுவலர் மங்களநாதன் தலைமையிலும் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர் நாராயணன் முன்னிலையிலும் நடைபெற்றது
அனைவரையும் திட்ட அலுவலர் தர்மராஜ் வரவேற்றார். இம்முகாமில் முதுகுளத்தூர் காவல் துணைக்கண்காணிப்பாளர் சண்முகம் முகாமை துவக்கிவைத்து மரக்கன்று நடவு செய்து சிறப்புரையாற்றினார்.
இறுதியில் உதவித்திட்ட அலுவலர் சிவக்குமார் நன்றி கூறினார். இதில் என்.எஸ் எஸ்.
மாணவர்களும் கிராம பொதுமக்களும் முன்னாள் மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பின்பு அரசு சமூகநீதி விடுதில் என்.எஸ்.எஸ்.மாணவர்கள் சுகாதாரப்பணியில் ஈடுபட்டனர்