தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மதுரை மாவட்டத்தின் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான மாற்று திறனாளி களுக்கான தடகளப் போட்டியில் 100 மீ, குண்டறிதல் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளான வீல் சேர் டேபிள் டென்னிஸ், பேட்மிட்டன், வாலிபால், கபடி, த்ரோபால் போன்ற போட்டிகள் கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கும், அறிவுசார் குறை பாடுடைய மாற்றுத்திறனாளி
களுக்கும், பார்வை யற்றோருக்கும், காது கேளாத பேச முடியாத மாற்றுத்திறனாளி
களுக்கும் போன்ற பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.


இப் போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்று வெற்றி பெற்றவர் களுக்கு பரிசளிப்பு விழா மதுரை ரேஸ்கோர்ஸ் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சென்னைஉயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் சாமிதுரை கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

விழாவில் மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன், மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், பயிற்சியாளர்கள் தியான் சந்து விருது பெற்ற பாரத தடகள பயிற்சியாளர் ரஞ்சித் குமார், குமரேசன், முன்னாள் மாவட்ட விளையாட்டு அலுவலர் பிரகாசம் ஆகியோர் உடனிருந்து சிறப்பு செய்தனர். பரிசளிப்பு விழாவில் ஏராளமான மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர் வீராங்கனைகளும் பெற்றோர்களும் சிறப்பு ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *