கோவை:
கோவை கணபதி, மணியகாரன்பாளையம் பகுதியில் மக்கள் தொண்டன் இரா. மாணிக்கவாசகம் பதிப்பகத்தின் சார்பில், திரு. மு. கிருஷ்ணசாமி (Ex. MC) அவர்கள் எழுதிய 10-வது நூலான “கோவை – கணபதி மணியகாரன்பாளையம் அன்றும் இன்றும் (1800 – 2026)” என்ற வரலாற்று நூல் வெளியீட்டு கிருஷ்ண கவுண்டர் திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவிற்கு திரு. பெ. முருகேசன் தலைமை தாங்கினார். திரு. K. நடராஜ் கவுண்டர், திரு. E. வேலுமணி நாயுடு, திரு. K. பழனிச்சாமிக்கவுண்டர், திரு. M.K. சண்முகசுந்தரம், திரு. N. முத்துசாமி உடையார், திரு. S. சண்முகசுந்தரம், திரு. R. ரகுபதி, திரு. C. நடராஜ் (Ex. MC) மற்றும் திரு. M.P. ஆறுக்குட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாமன்ற உறுப்பினர் மு. கிருஷ்ணசாமி (Ex. MC) அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
விழாவில் ஆடிட்டர் திரு. A. அர்ஜுனன்ராஜ் அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூலினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டார். நூலின் முதல் பிரதிகளை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திரு. P.R.G. அருண்குமார் (Ex. MLA), பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் .நித்தியானந்தம் (மற்றும் திரு. டாக்டர் S. அறிவழகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து நடைபெற்ற நூல் மதிப்புரை நிகழ்வில் சிந்தனைக் கவிஞர் டாக்டர் திரு. கவிதாசன், கோவை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் திரு. P. ராஜ்குமார் (MP), P.A. கல்விக் குழுமத் தலைவர் பேராசிரியர் திரு. P. அப்புக்குட்டி மற்றும் செல்வம் ஏஜென்சிஸ் திரு. D. நந்தகுமார் ஆகியோர் கலந்து கொண்டு நூலின் வரலாற்றுச் சிறப்புகளையும், மணியகாரன்பாளையம் பகுதியின் வளர்ச்சியையும் சுட்டிக்காட்டி வாழ்த்துரை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர்களாக மனிதநேயர் கோவை இரமேஷ், ISRO திரு. C. பிரபு, அரிமா திரு. G.M. சுப்பையன், அரிமா திரு. கமலாயுஸ் ராஜ், வழக்கறிஞர்கள் த. செந்தில் குமார், சிவசாமி தமிழன், மா.நா. சிவஞானம், N. மனோகரன், S. ஜானகி சம்பத் மற்றும் K. சசிக்குமார் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
முன்னதாக, காலை 9.00 மணிக்கு வித்வான் திரு. N. செல்வராஜ் குழுவினரின் நாதஸ்வர இசை நிகழ்ச்சியுடன் விழா இனிதே தொடங்கியது. நிகழ்ச்சியை திரு. K. நடராஜ் ஆசிரியர் தொகுத்து வழங்க, திரு. N. செல்வராஜ் நன்றியுரை கூறினார்.
மணியகாரன்பாளையம் பகுதியின் 1800-ஆம் ஆண்டு முதல் 2026-ஆம் ஆண்டு வரையிலான வரலாற்றுச் சுவடுகள், பழமையான கோயில்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களின் தகவல்கள் அடங்கிய இந்நூல், அப்பகுதி மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.