விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், பெரம்பை கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி – வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி மாதம் 2-ஆம் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் வெகு விமரிசையாக நடைபெற்றன.

இதையொட்டி, பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரங்கள் செய்யப்பட்டு, பக்தர்களுக்காக சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இந்நிகழ்ச்சியில் பெரம்பை கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். விழா ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டிருந்த நிலையில், பக்தர்கள் பக்திப் பரவசத்துடன் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *