அரியலூரில் நாங்க எம்ஜிஆர் ஆளுங்க உறுப்பினர்கள் ஒன்று கூடும் விழா
அரியலூர் முருகன் திருமண மண்டபத்தில் நாங்க எம்ஜிஆர் ஆளுங்க என்ற அமைப்பின் உறுப்பினர்கள் ஒன்று கூடும் விழா சிறப்பாக நடந்தது விழாவிற்கு அரியலூர் எம் ஆர் சுகுமாரன் தலைமை தாங்கினார் இவர் சிறு வயது முதற்கொண்டு எம்ஜிஆர் ரசிகர் மற்றும் தொண்டர் ஆவார் இவர் தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் முதுபெரும் எம்ஜிஆர் தொண்டர்கள் விசுவாசிகளை அழைப்பிதழ் கொடுத்து அழைத்து வந்து அரியலூரில் பிரம்மாண்ட விழா நடத்தினார்
இதில் தமிழ்நாடு பாண்டிச்சேரி கேரளா கர்நாடகா மற்றும் தமிழகத்தில் உள்ள பல பகுதிகளில் உள்ள எம்ஜிஆர் விசுவாசிகள் விழாவில் கலந்து கொண்டனர் இதில் வெள்ளகோவில் வடிவழகன் பூண்டி பழனிச்சாமி ஈரோடு ஜீவாபழனிச்சாமி ராசிபுரம் பன்னீர்செல்வம் தஞ்சாவூர் பன்னீர்செல்வம் ஜனார்த்தனம் பட்டுக்கோட்டை ராஜேந்திரன் ஊருக்கு உழைப்பவன் பல்லாண்டு வாழ்க நினைத்ததை முடிப்பவன் உழைக்கும் கரங்கள் ஆகிய திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ராஜகுமாரிக்கு விழாவில் சால்வை அணிவித்து சீல்டு வழங்கப்பட்டது
விழாவில் முன்னதாக அலங்கரிக்கப்பட்ட புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது விழாவில் 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் அனைவருக்கும் சால்வை அணிவித்து எம்ஜிஆர் புகைப்படம் பிரிண்ட் செய்த சீல்டு வழங்கப்பட்டது விழாவிற்கான ஏற்பாடுகளை அரியலூர் எம் ஆர் சுகுமாரன் சிறப்பாக செய்திருந்தார்