கூத்தாநல்லூர் அருகே கோரையாற்றில் விதைக்கப்பட்ட பனை விதைகள்…

கூத்தாநல்லூர்., செப்.28-

திருவாரூர் மாவட்டத்தை பசுமை வளம் மிக்க மாவட்டமாக மாற்றும் நோக்கில்,10 லட்சம் பனை விதைகள் நடும் மாபெரும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூர் அருகே கோரையாறு பகுதியில் நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில், திருவாரூர் மாவட்ட தமிழக வெற்றிக் கழக இணைச் செயலாளர் ஜி.ஆனந்த் பனை விதைகளை நடவு செய்து பணியை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆர்வத்துடன் பனை விதைகளை நடவு செய்தனர்.

நிகழ்ச்சியில் கூத்தாநல்லூர் நகர செயலாளர் எம்.ராஜேஷ், நகர நிர்வாகி எஸ்.தினேஷ், பி.பாரதி, எஸ்.எம்.சேக் அப்துல்லா, சி.ராஜேஷ், ஏ.நித்தீஷ், நகர இளைஞரணி அமைப்பாளர் காசிம் உள்ளிட்ட மாவட்ட மற்றும் நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பனை மரங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பிலும், இயற்கை வளங்களை பாதுகாப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், எதிர்கால தலைமுறைக்காக பனை மரங்களை அதிகளவில் உருவாக்கும் நோக்கில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இன்று விதைக்கப்படும் பனை விதைகள், நாளைய தலைமுறைக்கான பசுமை வளமாக மாறும் என்ற நோக்கில் இந்தப் பணி தொடங்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *