சென்னை ஆலந்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள 1வது குற்றவியல் நீதித்துறை நீதிபதியின் செயல்பாடுகளை கண்டித்து ஆலந்தூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தினர் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆலந்தூர் வழக்கறிஞர்கள்சங்க செயலாளர் எம். சரவணன் தலைமை வகித்தார்.

சங்க தலைவர் கே.சரவணன், மூத்த வழக்கறிஞர்கள் சேகர் ஜெயக்குமார், ஆனந்தகுமார், பால. அமுதநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் வழக்கறிஞர்கள் நீதிபதிக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார் அப்போது புறக்கணிப்போம் புறக்கணிப்போம் ஆலந்தூர் நீதிமன்றத்தை புறக்கணிப்போம், போராடுவோம் போராடுவோம் நீதிபதியை மாற்றும் வரை போராடுவோம் கோஷங்களை எழுப்பினர். பின்னர் சாலை மறியல் செய்ய சென்ற வழக்கறிஞர்களை பரங்கிமலை போலீசார் தடுத்து நிறுத்தினார். இதனால் சிறுது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *