துறையூர் செப்-28
திருச்சி மாவட்டம் துறையூரில் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை” துணை சபாநாயகர் ரவிசங்கர் துவக்கி வைத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார்.

அரசு மருத்துவமனைகளில் பிரசவங்கள் அதிகரிக்க செய்வதும், தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் தாய்மாமன் இல்லாத தாய்மார்களின் குழந்தைகளுக்கு தாய்மாமனாக இருந்து 23-06-2026 தேதியிலிருந்து தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் “தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை” தமிழக முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இன்று (செப்-28)துவக்கி வைத்து குழந்தைகளுக்கு தங்க மோதிரத்தை அணிவித்தார்.

இதனைத் தொடர்ந்து துறையூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சார்பில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தமிழக சட்டபேரவை துணை சபாநாயகர் ரவிசங்கர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்து குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் அணிவித்தார்.இதில் மாவட்ட மருத்துவ பயிற்சியாளர் டாக்டர் பாலாஜி, அரசு தலைமை மருத்துவமனை தலைமை மருத்துவர் பூபதி, வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துறையூர் நகரம் மற்றும் ஒன்றிய அளவில் சுமார்‌ 162 குழந்தைகள் தங்க மோதிரம் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் முதல் கட்டமாக சுமார் 50 குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டது. இத்திட்டத்தில் பயன் பெற்ற தாய்மார்கள் பேசும் போது,தாய்மாமன் இல்லாத எங்கள் குழந்தைகளுக்கு முதலமைச்சர் ஜோசப் விஜயே தாய்மாமனாக இருந்து தங்க மோதிரம் வழங்கியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, நாங்கள் என்றும் நன்றியுடன் இருப்போம் என்று கூறினர்.


இந்நிகழ்வில் தமிழக வெற்றிக் கழகம் திருச்சி வடக்கு மாவட்ட இணை செயலாளர் பா.மதன், நகர செயலாளர்கள் வினோத்குமார்(தெ), சூர்யா(வ), ஒன்றிய செயலாளர்கள் தர்மா(கி),
ரவிச்சந்திரன்(வ),சுதாகர்(தெ),சிவப்பிரகாசம்(மே),உப்பிலியபுரம் ஒன்றிய செயலாளர்கள்
ஆனந்த்(தெ),குணசேகரன்(வ),சண்முகம்(ம),பேரூர் கழக செயலாளர்கள் முத்துகிருஷ்ணன்(உப்பிலியபுரம்), கண்ணன் (எ)கிருஷ்ண மூர்த்தி(பாலகிருஷ்ணம்பட்டி) மற்றும் அரசு வழக்கறிஞர் செல்லதுரை,தவெக நிர்வாகிகள் மற்றும் தமிழக வெற்றி பேரவை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *