தூத்துக்குடி மாவட்டத்தில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் 3202குழந்தைகள். மாவட்ட ஆட்சியர் விஷுமகாஜன் தொடங்கி வைத்தார்.


தமிழக முதலமைச்சர் திங்கட்கிழமை மதுரை ராஜாஜி மருத்துவமனையில் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைத்தார் அதன் பிறகு அதற்கான விழா தூத்துக்குடி மருத்துவமனையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் குழந்தைகளுக்கு தாய் மாமன் தங்க மோதிரம் அணிவித்து திட்டத்தை துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் தெரிவித்ததாவது ஜூன் மாதம் 22 ஆம் தேதி முதல் அரசு மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிறக்கின்ற அனைத்து குழந்தைகளுக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் திட்டத்திற்கு 755.83 கோடி ரூபாய் அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூன் மாதம் 22ஆம் தேதி முதல் செப்டம்பர் மாதம் 26 ஆம் தேதி வரை மாவட்டம் முழுவதும் பிறந்த குழந்தைகள் கணக்கெடுக்கப்பட்டுஉள்ளது அதன்படி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 1779 குழந்தைகளும். கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் 999 குழந்தைகளும் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 424 குழந்தைகளும் பிறந்துள்ளது அதன்படி இன்று தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 50 குழந்தைகளுக்கு தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளது

அதன்படி கோவில்பட்டியில் 35 குழந்தைகளுக்கும் திருச்செந்தூரில் 26 குழந்தைகளுக்கும் 111 குழந்தைகளுக்கு இன்று தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் மோதிரம் வழங்கப்பட்டுள்ளது .கூட்ட நெரிசலை தவிர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில் தினசரி காலையில் 25 குழந்தைகளுக்கும் மாலையில் 25 குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்படும் எந்த தேதியில் வழங்கப்படுகிறது

என்ற விபரத்தை கிராம சுகாதார செவிலியர்கள் தகவல் தெரிவிப்பார்கள் அந்த தகவலின் அடிப்படையில் அரசு மருத்துவமனையில் வந்து தங்க மோதிரத்தை பெற்றுக் கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார் நிகழ்ச்சியில் தூத்துக்குடி சார் ஆட்சியர் விவேக் யாதவ் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் எபனேசர் ஜோயல் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *