திருச்சி: சிந்துவெளி8 ஆய்வு மையம் சார்பில் “ஒரு பண்பாட்டின் பயணம் – காவிரிக்கரையின் தூரிகை மொழி” காபி டேபிள் நூல் வெளியீட்டு விழா


திருச்சியில் நடைபெற்றது.சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் டாக்டர் சுந்தர் கணேசன் முன்னிலையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் சிந்துவெளி ஆய்வாளருமான ஆர். பாலகிருஷ்ணன் ஒரு பண்பாட்டின் பயணம் – காவிரிக்கரையின் தூரிகை மொழி புத்தகத்தை வெளியிடஓவியர் ராமசுரேஷ்,டிசைன் ஓவியப்பள்ளி தாளாளர் மதன் மற்றும் முதல்வர் திருமதி நஸ்ரத் பேகம் , பொற்கொடி, போத்தீஸ் முத்துக்குமரன்,நிஷா,யோக ஆசிரியர் விஜயகுமார் உள்ளிட்டோர் பெற்றுக் கொண்டனர்

.நூலை வெளியிட்டு சிந்து வெளி ஆய்வாளர் ஆர். பாலகிருஷ்ணன் பேசுகையில், “ஒரு பண்பாட்டின் பயணம் என்ற நூல் உலகம் முழுவதும் சென்றடைந்துள்ளது. ‘ஒரு பண்பாட்டின் பயணம் – காவிரிக்கரையின் தூரிகை மொழி’ என்ற இந்நூல், மாணவர்களின் கலைத்திறனையும் மரபுசார்ந்த ஓவியங்களையும் ஆவணப்படுத்தியுள்ளது. நாம் வந்த வழியைத் திரும்பிப் பார்ப்பதே வரலாறு. பிடித்ததை விடாதீர்கள்; பிடிக்காததைத் தொடாதீர்கள்” என்றார். ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் டாக்டர் சுந்தர் கணேசன் பேசுகையில், “ஓவியக் கலையைப் பரவலாக்க வேண்டும். வரலாறு என்பது ஒரு சமூகம் கடந்து வந்த பாதையாகும். அந்த வரலாற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கப் பல்வேறு வடிவங்களில் ஆவணப்படுத்த வேண்டும். அந்த வகையில், இந்நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு ஓவியமும் ஒரு கதையைச் சொல்லும் வகையில் அமைந்துள்ளது” என்றார்.ஓவியர் ராமசுரேஷ் பேசுகையில், “வாழ்க்கையைச் சுதந்திரமாக வாழுங்கள். ஓவியக் கலை, சுதந்திரமான வாழ்க்கையை வாழ்வதற்கான வழியை ஏற்படுத்துகிறது” பண்பாடு, வரலாறு, கலை மற்றும் பாரம்பரிய ஆவணங்களைப் பாதுகாத்து, அவற்றை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்க்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளது என்றார்.விழாவில் வரலாற்று ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், கலை ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *