தேனி மாவட்டம் கம்பம் ஸ்ரீ ஆதி சுஞ்சனகிரி மகளிர் கல்லூரியில் கல்லூரியின் என் எஸ் எஸ் நாட்டு நல பணித்திட்டம் சார்பில் நவீன உணவு பழக்கமும் குடல் ஆரோக்கியமும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி கல்லூரி நிறுவன செயலர் கம்பம் என் இராமகிருஷ்ணன் தலைமையில் கல்லூரி இணைச் செயலாளர் ஆர் வசந்தன் கல்லூரி ஒருங்கிணைப்பாளர் வைஷ்ணவி வசந்தன் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது

கல்லூரி முதல்வர் டாக்டர் ஜி ரேணுகா வாழ்த்துரை வழங்கினார் கம்பம் கிரசன்ட் கேஸ்ட்ரோ சென்டர் இரைப்பை குடல் நிபுணர் ஆலோசகர் டாக்டர் பி. முகமது சையது ரமீஸ் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எளிய வழி முறைகளையும் நொதித்த உணவுகள் நார் சத்து நிறைந்த உணவுகளால் ஏற்படும் நன்மைகளையும் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் எளிய வழி முறைகளையும் துரித உணவுகள் பேக்கரி பண்டங்களின் தீமைகளையும் நவீன உணவு பழக்கங்களால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதனால் ஏற்படும் பின் விளைவுகளையும் விரிவாக மாணவிகளுக்கு புரியுமாறு விளக்கி பேசியும் அவற்றில் இருந்து மாணவிகள் எவ்வாறு தங்களைப் பாதுகாத்துக் கொள்வது குறித்து பேசி மாணவிகளுக்கு அறிவுறுத்தினார்

இந்த நிகழ்ச்சியில் கல்லூரி துறை சார்ந்த மாணவிகளும் பங்கேற்று உணவு பழக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்பட்டு பயனடைந்தனர் கல்லூரி நாட்டு நல பணித் திட்ட அலுவலர் முனைவர் இரா தமிழ்ச்செல்வி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *