சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் விஜய் மதுரை வந்தார். மதுரை விமான நிலையத்தில் இருந்து அரசு மருத்துவ மனைக்கு வந்த முதலமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது..


அதன் பின்னர் தங்க மோதிரம் திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். மேடையில் குழந்தைகளுடன் தாய் மார்கள் அமரவைக்கப் பட்டிருந்தார்கள்.முதலில் 3 குழந்தைகளுக்கு முதல மைச்சர் விஜய் மோதிரங்களை அணிவித்தார். அப்போது அந்தக் குழந்தைகளின் பெயரைக் கேட்டு உச்சரித்தார். அந்த குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்தார். பின்னர் மேடையில் அமர வைக்கப்பட்ட தாய் மார்களிடமும் மோதிரம் அடங்கிய பெட்டகம் கொடுக்கப் பட்டது. அதன்பிறகு முதலமைச்சர் விஜய் இறங்கி வந்து குழந்தைகளுக்கு மோதிரங்களை அணிவித்தார்.


இந்த விழா முடிந்த பிறகு அவர் காந்தி அருங்காட்சியகத்துக்கு சென்றார். அந்த அருங்காட்சியகம் ரூ.10.25 கோடியில் புதுப்பிக்கப்பட்டது. அதை அவர் திறந்து வைத்து அருங்காட்சிய கத்தை சுற்றிப் பார்த்தார்.காந்தி அருங்காட்சியத்தில் மகாத்மா காந்தி பயன்படுத்திய பொருள் கள் உள்ளன. அவற்றைப் பார்த்து முதலமைச்சர் விஜய் ரசித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *