அரியலூர் செப் 29 அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் மாரியம்மாள் தலைமை வகித்தார் ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் ராஜேந்திரன் குடந்தை மேயர் சரவணன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் வாக்குத்திருட்டு தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவியில் இருந்து நீக்கி கைது செய்ய வலியுறுத்தியும் அவரது பதவிக்காலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் வாக்காளர் பட்டியலில் செய்யப்பட்ட மாற்றங்களை முழுமையாக மறுஆய்வு செய்ய வலியுறுத்தியும் பல்வேறு கோஷங்களை எழுப்பினார் ஆர்ப்பாட்டத்தில் நகர தலைவர் சிவக்குமார் பொதுக்குழு உறுப்பினர் சந்திரசேகர் மகிளா காங்கிரஸ் தலைவர் பூங்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்