​கோவை KPR கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் புத்தாக்கம் மற்றும் திறன் மேம்பாட்டு மையம் சார்பில், ‘HACK 2 IMPACT 2026 – SIH கட்டம் 2’ முன்மாதிரிகளை நெறிப்படுத்துதல் மற்றும் மதிப்பீடு செய்யும் நிகழ்வு கல்லூரி முதல்வர் முனைவர் பி. கீதா அவர்களின் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடைபெற்றது.

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் பயணத்தின் ஒரு பகுதியாக நடத்தப்பட்ட இப்போட்டியில் மொத்தம் 45 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியிலும் 6 உறுப்பினர்கள் இடம்பெற்று, தங்களின் புதுமையான முன்மாதிரிகளையும் தொழில்நுட்பம் சார்ந்த தீர்வுகளையும் காட்சிப்படுத்தினர்.

இதில் சிறப்பான தீர்வை வழங்கிய ‘சீரோ விஷன்’ அணி முதல் பரிசான 15,000 ரூபாயையும், ‘மைண்ட் பிளஸ்’ அணி இரண்டாம் பரிசான 10,000 ரூபாயையும், ‘மெட்ரோனிக் & மெட்ரெக்’ அணி மூன்றாம் பரிசான 5,000 ரூபாயையும் தட்டிச் சென்றன. இந்நிகழ்வில் ரத்தினம் பல்கலைக்கழக கணினி அறிவியல் துறைத்தலைவர் முனைவர் S. கார்த்திகேயன், இன்னோவேட் எடுடெக் சொல்யூஷன்ஸ் துணை நிறுவனர் A. முகமது அலி மற்றும் ரேம்பஎக்ஸ் டெக்னாலஜிஸ் நிறுவனர் பிரசாந்த் கருப்பசாமி ஆகியோர் நடுவர்களாகக் கலந்துகொண்டு மாணவர்களின் படைப்புகளை மதிப்பாய்வு செய்து தகுந்த ஆலோசனைகளை வழங்கி நெறிப்படுத்தினர். மாணவர்கள் தங்களது ஆய்வுச் சிந்தனைகளை வெளிப்படுத்தவும், கல்வி மற்றும் தொழில்துறை வல்லுநர்களிடமிருந்து மதிப்புமிக்க வழிகாட்டுதல்களைப் பெறவும் இந்நிகழ்வு ஒரு சிறந்த தளமாக அமைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *