தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி அடையாள அட்டைகள் மாதாந்திர உதவித்தொகை மற்றும் மூன்று சக்கர வாகனம் சக்கர நாற்காலி காதுக் கருவி கல்வி உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 56 மனுக்களைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவர் பெறப்பட்ட மனுக்களுக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்

இதனை தொடர்ந்து முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 44 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 26 லட்சத்து 70 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான செயற்க்கைக் கால்களை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்

இந்த கூட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கமலராஜன் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை அலுவலர் லெ. பாண்டி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *