காயல் பட்டிணம் ஆக -30

போக்கு வரத்து காவல் துறையினர்களை நியமிக்க தமிழக அரசுக்கு
மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

தூத்துக்குடி மாவட்டம், காயல் பட்டிணத்தில் ஒருவழி சாலைகளில் மோட்டர் பைக் மற்றும் ஆட்டோக்கள் எதிரும் முதிருமாக செல்கின்றன. மேலும் மெயின் பஜார் சாலையில் மோட்டார் பைக்களையும் சாலையிலும் நிறுத்தி வைக்கின்றனர். இதனால் போக்கு வரத்துக்கு இடையூராகவும் பேரூந்து மற்றும் கனரக வாகன ஒட்டிகள் மிகவும் சிரமம் பட்டு வாகனத்தை இயக்கி வருகின்றனர்.ஆகவே . ஒரு வழிச்சாலையில் போக்கு வரத்து இடையூர்களை சரி செய்யும் வகையில் காலை முதல் இரவு வரையிலும் நிரந்தரமாக போக்கு வரத்து காவல் துறையினர்களை நியமிக்க வேண்டும் என தமிழக அரசை மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சி வலியுறுத்துகிறது.

மேலும். ஒட்னர் உரிமம் இல்லாமல் சிறுவர்கள் மோட்டார் பைக்குகளை இயக்கி வருவதனால் சாலை விபத்துக்குள்ளாகி வருகின்றனர். மேலும். இது போன்று சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்க மோட்டார் பைக்களை இயக்கும் சிறுவர்களின் பெற்றோர்கள் மீது வழக்கு மற்றும் சிறை தண்டனை சட்டத்தின் மூலம் காவல்துறையினர் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சாலைகளில் நடை பெறும் விபத்துக்களை தடுக்க முடியும்.

எனவே : மது போன்ற போதைகளால் ஒரு சிலர் மோட்டார் பைக் வாகனத்தை இயக்கி வருகின்றனர். இதனை கண்டறியும் வகையில் முழுமையான சோதனை செய்து மது போதையில் வாகனத்தை இயக்குவர்கள் மீது சட்ட ரிதியான அபதாரமும் அவ் வாகனத்தை பறிமுதலும் செய்ய வேண்டும் எனவும் ஒரு வழிச்சாலையில் இடையூராக நிற்க்கும் மோட்டார் பைக்குகள் மீதும் எதிரே வரும் அனைத்து வாகனத்தின் மீது காவல் துறையினர் தகுந்த நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என மக்கள் எழுச்சி ஜனநாயக கட்சியின் சார்பாக கேட்டு கொள்கிறோம். இவ்வாறு காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *