மதுரை மாமன்ற மாநகராட்சி கூட்டம் பொறுப்பு மேயர் நாகராஜன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொள்ளவந்த தி.மு.க கவுன்சிலர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தின் போது அனுமதி டிக்கெட்டை ரூபாய் 4,000 வரை விற்பனை செய்ததாக கூறி பதாகைகள் ஏந்தி கூட்டு அரங்கில் மேயரின் முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தி.மு.க. மாமன்ற கூட்டத் தலைவர் ஜெயராமன் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம்நடந்தது. மேலும் அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் எம்.பி. வெங்கடே சன் ஆகியோரை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் மாமன்ற அரங்கில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.மேயரின் வேண்டுகோளுக்கிணங்க மீண்டும் கூட்டத்தில் தி.மு.க. கவுன்சிலர்கள் கலந்து கொண்ட னர். மேலும் மேயர் நாகராஜன் முக்கியமான 2 தீர்மானங்களை கொண்டு வந்தார்.
முதல் தீர்மானமாக, மாற்றுத்திறனாளிகள் உயிரிழந்தால், மதுரை மாநகராட்சியின் மின் மயானத்தில் அவர்களின் உடலை கட்டண மின்றி எரியூட்டும் வசதி வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாற்றுத் திறனாளிகள் எதிர்கொள்ளும் பல்வேறு இன்னல்களை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.