எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

சீர்காழி அருகே சரஸ்வதி விளாகம் கிராமத்தில் இடபிரச்னை தொடர்பாக 164 தடை உத்தரவு பிறப்பிப்பு. நில மீட்பு போராட்டம் அறிவித்திருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை கிராமத்தில் நுழைய விடாமல் போலீசார் தடுத்தால் வாக்குவாதம் பரபரப்பு:-

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா கோபாலசமுத்திரம் ஊராட்சி சரஸ்வதி விளாகம் கிராமத்தில் சர்வே எண் 568/1A2 ஒரு ஏக்கர் 50 குழி இடம் தைக்காலை சேர்ந்த ஜெகபர்அலிக்கு சொந்தமான இடத்தை ஆதிதிராவிடர் நலத்துறையால் வீட்டுமனை பட்டா வழங்குவதற்காக கடந்த 1999ஆம் ஆண்டு கையகப்படுத்தினர்.

ஆனால் ஜெகபர் அலிக்கு பணம் கொடுத்து அரசு அதிகாரிகள் பத்திரப்பதிவு செய்யாமல் விட்டதால் ஜெகபர்அலி நிலத்தை வேறு தனிநபருக்கு விற்பனை செய்துள்ளார். அதன்பிறகு கடந்த 2014ம் ஆண்டு நான்காவது நபராக சங்கர், ரவி ஆகியோர் பிரச்னைக்குரிய ஒரு ஏக்கர் இடம் மற்றும் அருகில் இருந்த இடம்மென்று மொத்தம் 4 ஏக்கர் அளவிற்கு நிலத்தை வாங்கி அதில் விவசாயம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் விதிமுறைகளை மீறி மேற்கொள்ளப்பட்ட பாகப்பிரிவினை மற்றும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறி கடந்த 2021 ஆம் ஆண்டு குறிப்பிட்ட இடம் அரசு புறம்போக்கு ஆதிதிராவிடர் நத்தமாக வகை மாற்றம் யுடிஆரில் செய்யப்பட்டது.

இதனால் சங்கர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்நிலையில் ஆதிதிராவிட நலத்துறையால் கையகப்படுத்தப்பட்ட இடத்தை தனிநபர்கள் ஆக்ரமித்து வைத்துள்ளதாக புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காததால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியினர் பிரச்சனைக்குறிய இடத்தில் நில மீட்பு போராட்டமாக குடியேரும் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர். இதனைத்தொடர்ந்து சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் வகையில் ஆணைக்காரன்சத்திரம் காவல் ஆய்வாளர் அறிக்கையின்படி சீர்காழி கோட்டாட்சியர் பாலமுருகன் சர்ச்சைக்குறிய இடத்தில் யாரும் செல்லக்கூடாது என்பதற்காக 164 தடை உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து சீர்காழி காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் சரஸ்வதிவிளாகம் கிராமத்தில் குவிக்கப்பட்டனர். நில உரிமையாளர் சங்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில் 2014ம் ஆண்டு இடத்தை வாங்கி பட்டாமாற்றம் செய்து நாங்கள் வைத்துள்ள இடத்தை 2021ல் எப்படி ஆதிதிராவிடர் நலத்துறைக்கு அதிகாரிகள் மாற்றினார்கள் என்று தெரியவில்லை. தவறுசெய்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். இதுதொடர்பாக மயிலாடுதுறை ஆட்சியர் அலுவலகத்தில் காலை அமைதிபேச்சுவார்த்தை கூட்டம் நடந்தது.

இதில் உரிய விசாரணை செய்து ஒரு மாதகாலத்திற்குள் இதற்கு தீர்வுகாணப்படும் என்று ஆட்சியர் உறுதி அளித்ததை அடுத்து குடியேறும் போராட்டம் நடத்தவில்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சரஸ்வதிவிளாகம் கிராமத்தில் கட்சி கொடியேற்றப்போவதாக வந்தவர்களை கிராம எல்லையின் போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

கிராமத்தில் இருந்த பொதுமக்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை சந்திக்க வெளியே விடாமல் தடுத்ததால் போலீஸாருக்கும், கட்சியினருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன்பிறகு கட்சியினர் குறைந்த நபர்களை கிராமத்திற்குள் அனுமதித்து கட்சி கொடியேற்றிவிட்டு அங்கிருந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழல் ஏற்பட்டடது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *