தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் அமைப்பு கூட்டம் அரியலூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்தது கட்சியின் மாவட்ட செயலாளர் எம் இளங்கோவன் தலைமை தாங்கினார் சிஐடியு மாவட்ட செயலாளர் அரியலூர் துரைசாமி சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் சிற்றம்பலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநில செயற்குழு உறுப்பினர் அறந்தை ஜீவி சிறப்புரையாற்றினார் அவர் கூறுகையில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள கவிஞர்கள் எழுத்தாளர்கள் நாட்டுப்புற கலைஞர்கள் இலக்கிய ஆர்வலர்கள் ஆகியோரை ஒன்றிணைத்து விரைவில் இலக்கிய விழா மற்றும் தொடர் விழாக்கள் அரியலூரில் நடத்துவது

இதற்காக ஆறு பேர் கொண்ட ஒருங்கிணைப்பாளர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது அரியலூர் ஒன்றியத்தைச் சேர்ந்த திருகோணம் கவிஞர் கி மூர்த்தி தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார் உறுப்பினர்களாக என் வேல்முருகன் வழக்கறிஞர் அருணன் எஸ் சரோஜினி எம் சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் அரியலூர் மாவட்டத்தில் கலைத்துறைக்கு வலுவூட்டுப் பணிகள் தொடர்ந்து நடைபெறும் இவ்வாறு அவர் கூறினார் சசிகுமார் அனைவருக்கும் நன்றி கூறினார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *