எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இரவு திடீர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த அமைச்சர் வன்னியரசு உருவப்படத்தை திண்டுக்கல்லில் இந்து முன்னணியினர் அவமதித்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்தும் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் சீர்காழி கடைவீதியில் சீர்காழி – சிதம்பரம் நெடுஞ்சாலையில் இளஞ் சிறுத்தைகள் எழுச்சி பாசறை மாநில துணை செயலாளர் பார்த்திபன் சித்தார்த் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின் போது அமைச்சர் வன்னியரசு படத்தை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களை கைது செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர் இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி டி.எஸ்.பி. சரவணன், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் காயத்ரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் இதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர். இதனால் மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *