அரியலூரில் சுகாதார ஆய்வாளர்கள் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள் சங்கம் அரியலூர் மாவட்ட அமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அரியலூர் மாவட்ட சுகாதார அலுவலகம் முன்பு நடந்தது சங்கத்தின் மாவட்ட செயலாளர் அருள் தலைமை தாங்கினார்
மாவட்ட இணைச் செயலாளர் அருள்பிரியன் அனைவரையும் வரவேற்று பேசினார் முன்னாள் மாவட்ட தலைவர் வகீல் மற்றும் ஸ்மித்சைமன் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினார்கள் மாநில செயலாளர் கன்னியப்பன் ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார் நிகழ்ச்சியின் நிறைவாக கணேஷ்குமார் அனைவருக்கும் நன்றி கூறினார்
சுமார் 2 மணி நேரம் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது சுகாதார ஆய்வாளர்களின் பதவி உயர்வு பணியிடங்களான TPA, HE, BHS, NMS ஆகியவற்றை உடனடியாக நிரப்பிட வேண்டும் பெருமளவு காலியாக உள்ள டெங்கு தடுப்பு பணியிடங்களான சுகாதார ஆய்வாளர் நிலை-2 பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டு பணிகளில் புகை மருந்து அடித்தல் தூய்மை பணி உள்ளிட்ட பிற துறை முக்கிய பணிகளை முறையாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்காது சுகாதார ஆய்வாளர்களை மட்டுமே பொறுப்பாக்குவதை கைவிட வேண்டும் தீவிர காய்ச்சல் டெங்கு தடுப்பு பனிசுமையில் கால நேரம் இன்றி ஈடுபட்டுக் கொண்டிருப்பதை கருத்தில் கொண்டு LCDC முகாம்களை தள்ளி வைத்துவிட வேண்டும் 51 வது மாநில மாநாட்டு தீர்மான கோரிக்கைகள் தொடர்பாக அழைத்துப் பேசி உரிய தீர்வு வழங்கிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அரியலூரில் நடந்தது