கும்பகோணம் ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் பிறந்தநாளான காந்தி ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
இதையொட்டி கும்பகோணம் உச்சிப்பிள்ளையார் கோவில் அருகே ஜவுளி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நிறுவப்பட்டுள்ள மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு சங்க நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில் சங்கத்தின் செயலாளர் பழனியப்பன் அனைவரையும் வரவேற்று பேசினார். தொடர்ந்து காந்தியடிகளின் சிலைக்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் ரமேஷ், தர்மராஜன், சிவபிரகாஷ், சுப்ரமணியன், பாலாஜி மற்றும் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
காந்தியடிகளின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அவரது சத்தியம், அகிம்சை, எளிமை மற்றும் தேசப்பற்று உள்ளிட்ட உயரிய கொள்கைகளை நினைவுகூர்ந்து மரியாதை செலுத்தப்பட்டது.