சேலம் மேற்கு மாவட்டம் மேட்டூர் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 157 வது பிறந்தநாள் விழா மற்றும் கர்மவீரர் காமராஜர் அவர்களின் 51 வது நினைவு தினம் 02.10.2026 அன்று காலை 9 மணி அளவில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு.பாலசுப்பிரமணியன் அவர்கள் தலைமை தாங்கினார் காந்தி சிலைக்கு மின்வாரிய ஐ என் டி யு சி மாநில பொருளாளர் எஸ் பாலசுப்பிரமணி அவர்களும் காமராஜர் சிலைக்கு வழக்கறிஞர் சிவராமன் அவர்களும் மாலை அணிவித்தனர்
மேலும் இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் பழனிசாமி நகர துணை தலைவர் காளியப்பன் மற்றும் இளைஞர் காங்கிரஸ் மாவட்ட முன்னாள் துணைத் தலைவர் கௌதமன் ஐ என் டி யு சி மாவட்ட துணைத் தலைவர் ஜெயராமன் மின்வாரிய துணைத் தலைவர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
இந்நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர்கள் ராஜ்மோகன் சசிகலா தனசேகரன் சேலம் கேம்ப் சுப்பிரமணி ஐசக் குருசாமி நகர துணை தலைவர் கனகராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமார் மகிலா காங்கிரஸ் லட்சுமி மீனவர் அணி ஜேம்ஸ் தேவுடு மற்றும் காங்கிரஸ் தியாகி எம் பி சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் காங்கிரஸ் நகர கமிட்டி சார்பாக பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர