துறையூர் அக்-02
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள வெங்கடேசபுரம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தியை (அக்டோபர் -02) முன்னிட்டு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.இதில் 52 தீர்மானங்கள் ஏற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் வட்டாட்சியர் சித்ரா கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார்.இதில் ஊராட்சி செயலர் அழகேசன், விஏஓ ஜெகநாதன், அங்கன்வாடி அமைப்பாளர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்