தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள சில்வார் பட்டி ஊராட்சியில்காந்தியடிகளின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி செயலர் பிச்சை மணி தலைமை வகித்தார்

கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம் தணிக்கை அறிக்கை தூய்மையான குடிநீர் வினியோகம் பாரதம் கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டம் சிறு பாசன குளங்கள் மற்றும் ஏரிகள் புதுப்பித்தல் ஜல்ஜீவன் திட்டம் தூய்மை பாரத இயக்கம் ஊரகம் திட்டம் கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் தீனதயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம் தண்ணீர் ஊரக சுய வேலைவாய்ப்பு நிறுவனம் கிராம செழுமை மீட்சித் திட்டத்தின் கீழ் பொது சொத்துக்கள் சேவைகள் வள மேம்பாட்டு திட்டம் மற்றும் சமூக மேம்பாடு திட்டம் பண்ணை மற்றும் பண்ணை சாரா செயல்பாடுகள் ஆடு மாடு வளர்ப்பு வீட்டு உபயோக பொருட்கள் தொகுப்பு சிறுதானியங்கள் மற்றும் பாரம்பரிய அரிசி தின்பண்டங்கள் தயாரித்தல் தொழில் தொகுப்புகள் மண்பாண்டம் தொழில் தொகுப்புகள் மற்றும் சீமை கருவேல மரங்கள் அகற்றுதல் மற்றும் இதர தலைப்புகளிலும் விவாதிக்கப்பட்டது.

மேலும் டெங்கு காய்ச்சல் பொதுமக்கள் சேமித்து வைக்கும் தண்ணீரிலும் மழைக்காலங்களில் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்க வாய்ப்பு உள்ள அனைத்து பொருட்களில் கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் பரவுகிறது எனவே பொதுமக்கள் வீட்டில் சேமித்து வைக்கும் தண்ணீரை மூடி வைக்கவும் சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றவர் பொது மக்களுக்கு அறிவுறுத்தினார்

முன்னதாக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் குழந்தைகள் திருமணம் தடுப்பு உறுதிமொழியினை ஊராட்சி செயலர் பிச்சை மணி தலைமையில் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இந்த கூட்டத்தில் கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் சமூக சேவகர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *