துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூரில் இந்திய தேசிய காங்கிரஸ் தொழிற்சங்கம் சார்பில் செந்தில் தலைமையில் கர்ம வீரர் காமராஜரின் 51வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
இதில் திருச்சி வடக்கு மாவட்ட பொருளாளர் நல்ல சிவம் காமராஜர் நினைவு தின பேரணியை துவக்கி வைத்தார்.

இந்த பேரணி பேருந்து நிலையத்தில் இருந்து துவங்கி எஸ்எல்ஆர் பில்டிங் முன்பு உள்ள காமராஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வட்டாரத் தலைவர் மாணிக்கம், நகர தலைவர் இராமநாதன், புகழேந்தி, பாண்டியன், டிவி கண்ணன், அரவிந்தன், பெரியசாமி, சதீஷ், திருமுருகன், பசீர் அகமது, பூபேஷ், முகமது பைசல், முகமது பாரூக்,சேகர், குருசாமி, முத்துகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *