மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழாவை தொடர்ந்து நடந்து வந்த 16 நாள் மண்டல பூஜை நிறைவடைந்தது. தரிசனத்துக்காக பல்லாயிரம் பக்தர்கள் குவிந்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குட முழுக்கை முன்னிட்டு ராஜகோபுரம் உள்பட அனைத்து பகுதி களிலும் ரூ.25 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து 17 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த செப். 17ம் தேதி குடமுழுக்கு விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

தொடர்ந்து 18ம் தேதி முதல் 16 நாட்களும் மீனாட்சி அம்மன் மற்றும் சுந்தரேஸ்வரர், மூலவர்களுக்கு தினமும் பல்வேறு வாசனை திரவியங்கள், பால் மற்றும் பன்னீரால் சிறப்பு அபிஷே கங்கள் செய்யப்பட்டன. மூலவருக்கு சக்தியை நிலை நிறுத்து வதற்காக தினமும் பூஜைகள், சிவாச்சாரியார் களால் வேத மந்திரங்கள் முழங்க நடத்தப்பட்டன. மண்டல பூஜை நிறைவு விழா நடைபெற்றது.

நிறைவு விழாவை முன்னிட்டு விசேஷ ஹோமங்கள் மற்றும் யாகசாலை பூஜைகள் கோயில் வளா கத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்ட வேதிகைகளில் நடத்தப்பட்டன. பூஜையின் முக்கிய நிகழ்வான 108 வலம்புரி சங்குக ளில் புனித நீர் நிரப்பட்டு, சிறப்பு சங்கு பூஜை மற்றும் யாகங்கள் நடத்தப்பட் டன.

யாகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீர் மற்றும் சங்கு தீர்த்தத்தைக் கொண்டு மீனாட்சி அம் மனுக்கும், சுந்தரேஸ்வரருக்கும் மகா அபிஷேகம் செய்யப்பட்டன.
அபிஷேகம் முடிந்த பின் மீனாட்சி அம்மனுக்கும், பிரியாவிடையுடன் கூடிய சுந்தரேஸ்வரருக்கும் பட்டு வஸ்திரங்கள் மற்றும் வைர, தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட் டன.


மகா குடமுழுக்கின் நிறைவுப் பகுதி என்பதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல்லாயிரக் கணக்கான பக் தர்கள் கோயிலில் குவிந்தனர். இதனால், காலை 11 மணிக்கே கோபுர வெளி கதவுகள் மூடப்பட்டன. பின்னர் பிற்பகல் 3.30 மணிக்கு நடை மீண்டும் திறக்கப் பட்டது. அப்போதும், பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து விட்டு சென்றனர். மண்டல பூஜை நிறைவடைந்ததைத் தொடர்ந்து குடமுழுக்கிற் கான அனைத்து திருச்சடங்குகளும் முறைப்படி நிறைவடைந்தது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *