துறையூர் பெருமாள்மலைக்கு ஹெல்மெட் அணியாமல் சென்ற இருசக்கர வாகனங்களுக்கு தடை

துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பெருமாள் மலையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சம்மேத ஸ்ரீ வெங்கடாஜலபதி கோவிலில் புரட்டாசி 3வது வாரம் சனிக்கிழமை (அக்டோபர் -03) பிரம்மோற்சவம் நடைபெற்றதை தொடர்ந்து பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

இதனை தொடர்ந்து மலைமீது உள்ள பெருமாளை தரிசிக்க செல்லும் பக்தர்களின் நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை போக்குவரத்து காவல்துறை உதவி காவல் ஆய்வாளர்கள் ஸ்டீபன், ஜெபக்குமார் மற்றும் பெண் காவலர்கள் காஞ்சனா, லீலாவதி உள்ளிட்ட போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது ஓட்டுநர்கள் சீட் பெல்ட், ஓட்டுநர் உரிமம், ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.ஹெல்மெட் அணியாமல் சென்றர்கள், மதுபோதையில் சென்றவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இருசக்கர வாகனங்களில் பக்தர்கள் அதிக அளவில் மலை உச்சிக்கு செல்வதால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.ஆகவே விசேஷ நாட்களில் நான்கு சக்கர வாகனங்களுக்கு மட்டுமே மலை மீது செல்ல அரசு அனுமதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முசிறி டிஎஸ்பி சச்சிதானந்தம் அறிவுறுத்தலின் படி இன்ஸ்பெக்டர் கருணாகரன் தலைமையில் காவல் உதவி ஆய்வாளர் ராஜதுரை உள்ளிட்ட 80 மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.ரோந்து போலீசார் மற்றும் சிங்கப்பெண் அதிரடி படை போலீசாரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *