:
கல்பாக்கம் அக் 4 மழைக்கால நோய்கள் குறித்து செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் கிராமத்தில் உள்ள கொரானா சிறப்பு மருத்துவர் குமார் அவர்களிடம் விவரம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது;
சென்னை போன்ற பெரு நகரங்களில் கொசுக்கடியால் டெங்கு நோய் அதிகம் பரவுகிறது கறுப்பு வெள்ளை புள்ளிகளுடன் காணப்படும் சிறிய வடிவிலான புலிப்புசு என்று கூறப்படும் கொசுக்கள் மழைக்காலங்களில் அதிக அளவில் இனப்பெருக்கம் செய்யும்
இவை தேங்காய் சிரட்டை உடைந்த கண்ணாடி பிளாஸ்டிக் பாட்டில்கள் வாழை மற்றும் தென்னை மட்டைகள் டயர்களில் தேங்கியிருக்கும் தூய்மையான சிறிதளவு மழை நீர் இருக்கும் போதும் அதில் இனப்பெருக்கம் செய்கின்றன டென் 1 டென் 2 டென் 3 டென் 4 என்ற வைரஸ் தாக்கும் போது அதிக உடம்பு வலி இடுப்பு வலி உட்பட காய்ச்சல் வாந்தி மயக்கம் வயிற்றுப் போக்கு வரும் பெரும்பாலும் இந்த கொசுக்கள் பகல் நேரத்தில் கடிக்கும் டெங்கு வகை கொசுக்கள் ஒருவரைக் கடித்தால் 100 முதல் 105 டிகிரி வரை கடுமையானக் காய்ச்சல் இருக்கும்
உடலில் சிவந்த தழும்புகள் கண்களின் பின்னால் வலி போன்ற தொல்லைகள் ஏற்படும் இந்த நேரங்களில் அதிகமாக தண்ணீர் குடிப்பது அவசியம் முனிசிபாலிடி கிராம பஞ்சாயத்துகளில் குழாய் மூலம் வழங்கப்படும் குளோரின் கலந்த நீரைக் காய்ச்சிக் குடிப்பதால் சளி தொல்லை இருக்காது கபசுப நீர் நிலவேம்புக் கசாயம் குடிக்கலாம் வீட்டைச் சுற்றி மழை நீர் தேங்காமல் நாம் பார்த்துக் கொள்வது போல பக்கத்து வீடுகளிலும் தண்ணீர் தேங்காமல் கவனிக்க வேண்டும்
அத்துடன் புரதச் சத்து அதிகம் உள்ள முட்டை பால் காய்கறி சூப் கஞ்சி போன்றவை உட்கொள்ளலாம் இந்த மழைக் காலங்களில் குழந்தைகள் பாதிப்புக்குள்ளாகும் வாய்ப்பு உள்ளதால் அவர்களை மிக கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் காய்ச்சல் இருப்பது தெரிந்ததும் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று இரத்தப் பரிசோதனை செய்து ஓ ஆர் எஸ் கரைசல் வாங்கி பருக வேண்டும்
4 அல்லது அதற்கு மேற்பட்ட வர்களுக்கு காய்ச்சல் இருப்பது தெரிந்தால் உடனே அரசு மருத்துவமனைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் சுகாதாரப் பணியாளர்கள் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கே நேரில் வந்து சிகிச்சையளிப்பார்கள் சாப்பாட்டுக்கு முன்பும் பின்பும் கை கால் சோப்பு பயன்படுத்தி சுத்தமாகக் கழுவிக் கொள்ள வேண்டும் கழிவறைக்குச் சென்று வந்ததும் கால் கை சோப்பு போட்டு நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ள வேண்டும் எனவே டெங்கு காய்ச்சல் குறித்து பொதுமக்கள் பயப்படத் தேவையில்லை என்றார்