கடலூர் பெரியார் அரசு கலைக் கல்லூரியில் வரலாற்று துறை கௌரவ விரிவுரையாளர் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததை, பாதிக்கப்பட்ட மாணவி கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்திருந்தார்.

இதனை கல்லூரி உட்புகார் கமிட்டி 10 நாட்கள் கழித்து விசாரணை நடத்தியது. விசாரணையின் போது மாணவியிடம் வரம்பு மீறி மிரட்டும் வகையிலும் அநாகரீகமாகவும் பேசியுள்ளனர். நீண்ட நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காததால் கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

போராடிய மாணவர்களிடம் தேவனாம்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மிரட்டும் வகையிலும் மரியாதை குறைவாகவும் பேசியுள்ளார். இதில் போராடிய மாணவர் ஒருவரை கல்லூரி நிர்வாகம் 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்துள்ளது.


எனவே, கடலூர் பெரியார் கல்லூரி உட்புகார் கமிட்டியை கலைத்து புது உட்காரு கமிட்டி அமைக்க வலியுறுத்தியும்அநாகரிகமாக பேசிய உட்புகார் கமிட்டி உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் மாணவர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் தேவனாம்பட்டினம் காவல் உதவி ஆய்வாளர் முத்துகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்… (5/10/2026) அன்று இந்திய மாணவர் சங்கம் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் திட்டமிடப்பட்டது.

கடலூர் மாவட்ட ஆட்சியர் பேச்சுவார்த்தையில் கோரிக்கையை ஏற்றுக் கொள்வதாகவும் அனைத்தையும் உடனடியாக சரி செய்து தருவதாகவும் உறுதியளித்தார். எனவே போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதில் மாவட்ட தலைவர் பூபதி, மாவட்ட செயலாளர் சௌமியா, மாநில குழு உறுப்பினர் ஜீவானந்தம், மாவட்ட இணை செயலாளர்கள் சிவ நந்தினி, சிவன்ராஜ், செங்கதிர்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் கனிஷ்கர், அன்பு மாவட்ட குழு உறுப்பினர்கள் விமல், கனிமொழி இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் சின்னத்தம்பி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *