தூத்துக்குடி அருகேயுள்ள மீளவிட்டான் பகுதியில் டாஸ்மார்க் கடை புதியதாக அமைக்க அரசு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது இதனையடுத்து அப்பகுதி மக்கள் தொடர்ந்து ஒன்பதாவது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி நேரில் சென்று பொதுமக்களிடம் விபரங்களை கேட்டறிந்த போது பாதிப்பு விபரங்களையும் பொதுமக்கள் எடுத்துரைத்தனர்
மேயர் ஜெகன் பொியசாமி உடனடியாக சப் கலெக்டர் விவேக் யாதவ்விடம் விபரங்களைக் கேட்டறிந்து அங்கு உடனடியாக விரைந்து வந்தார் பொதுமக்களுடன் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி சப் கலெக்டர் விவேக் யாதவ் ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர் அதன் பிறகு மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி மற்றும் பொதுமக்களிடம் சப் கலெக்டர் விவேக் யாதவ் இந்த இடத்தில் டாஸ்மார்க் கடை வராது என்று உறுதிமொழி அளித்தார் மேலும் டாஸ்மார்க் பொது மேலாளர் உங்களுக்கு கடிதம் கொண்டு வந்து தருவார் என்றும் சப் கலெக்டர் உறுதி அளித்தார்


அப்போது பொதுமக்கள் கூறுகையில் கடந்த 9 நாட்களாக நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி எங்களுடன் வந்து விவரங்களை கேட்டு அறிந்து அதிகாரிகளிடம் உடனடியாக தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இந்த இடத்தில் டாஸ்மார்க் கடை அமைக்க வேண்டாம் என்று உறுதி கேட்டுக்கொண்டார் அதன் அடிப்படையில் தூத்துக்குடி சப் கலெக்டர் இங்கு வருகை தந்து மேயர் ஜெகன் பொியசாமியிடமும் எங்களிடமும் இந்த இடத்தில் டாஸ்மார்க் கடை வராது என்று உறுதி அளித்தார். வருவாய்த்துறை அதிகாரிகள் அல்லது டாஸ்மார்க் அதிகாரிகள் கடை ரத்து செய்யப்பட்டதாக கடிதம் உங்களுக்கு வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார் நாங்கள் தொடர்ந்து போராடி வந்தோம் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமி வந்து எங்களுடைய போராட்டத்திற்கு தீர்வு கண்டுள்ளார் அதற்கு நாங்கள் மாநகராட்சி மேயர் ஜெகன் பொியசாமிக்கும் சப் கலெக்டர் விவேக் யாதவ்க்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.


உடன் திமுக மாமன்ற உறுப்பினர் கீதாமுருகேசன் சுற்றுச்சூழல் அணி மாவட்ட துணை அமைப்பாளர் முத்துராமன், போல்பேட்டை பகுதி பிரதிநிதி பிரபாகர் மற்றும் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *