திண்டுக்கல் மஹா ஜோதி ஹோட்டலில் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் கூட்டமைப்பு மற்றும் நகரவாசி மாத இதழ் சார்பில் நடைபெற்ற “சிறந்தோர் விருது – 2026” வழங்கும் விழா சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழாவில், சிறந்த அறக்கட்டளை மற்றும் சேவைக்கான விருது ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தேசிய தலைவர் அரவிந்தன் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும், சிறந்த சமூக சேவகருக்கான விருது ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் தேசிய பொதுச் செயலாளர் நந்தகுமார் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

அறக்கட்டளையின் சமூக சேவைகளைப் பாராட்டி, சிறந்த சமூக சேவைக்கான விருதுகள் தேசிய கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் ஏழுமலை, திருவள்ளூர் மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார், மணவாள நகர் கிளை தலைவர் ரமேஷ், மணவாள நகர் கிளை செயலாளர் சந்தோஷ், வடசென்னை மாவட்ட தலைவர் அருள்ராஜ் மற்றும் தென்சென்னை மாவட்ட செயலாளர் கார்த்திகேயன் ஆகியோருக்கும் வழங்கப்பட்டன.

ஸ்ரீ தர்மசாஸ்தா பக்த சேவா அறக்கட்டளையின் சார்பில் பொதுமக்களின் நலனுக்காக தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு சமூக சேவைகள் மற்றும் சேவைப் பணிகளைப் பாராட்டி இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருதுகள் அறக்கட்டளையின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு மேலும் சிறப்பாக சமூகப் பணியாற்றுவதற்கான ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்துள்ளதாக அறக்கட்டளை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *