தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 377 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் இரா. வைத்திநாதன் பொதுமக்களிடமிருந்து பெற்றுக் கொண்டார்

இந்த கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை புதிய வீட்டுமனை பட்டா வேலைவாய்ப்பு மற்றும் இதர மனுக்கள் என 377 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பொது மக்களின் கோரிக்கை மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி மனுக்கள் மீது குறித்த காலத்திற்குள் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்

முன்னதாக மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்..இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ப ராஜகுமார் பெரியகுளம் சார் ஆட்சியர் தவலேந்து மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கலைக் கதிரவன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் இராமகிருஷ்ணன் பொது தனித்துணை ஆட்சியர் ச.பா.தி. கவிதா உதவி ஆணையர் கலால் பஞ்சாபகேசன் மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் நிலம் கதிர்வேல் உதவி ஆணையர் ஹலால் பஞ்சாப கேசன் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறை அலுவலர் பாண்டி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *