பொட்டலூரணி சேர்ந்த சமூக ஆர்வலரும் கழிவு மீன் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டக் குழுவின் தலைவருமான சங்கரநாராயணன் மற்றும் ஊர் பொதுமக்களுடன் வந்து மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தன அதன் பின்பு செய்தியாளர்களிடம் சங்கரநாராயணன் கூறுகையில் செக்காரக்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இதில் உறுப்பினராக சேர்ந்து விவசாயிகள் கடன் வாங்குவார்கள் ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளாக புதிய உறுப்பினர்களை சேர்க்காமல் தாமதம் செய்து வருகின்றனர் அது போல எவ்வளவு நிதி வருகிறதோ அந்த நிதியை தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டுமே வங்கியின் அதிகாரி கொடுத்து வருகிறார்.
விவசாயிகளுக்கு உரம் பூச்சிக்கொல்லி மருந்து போன்ற இடு பொருட்களை விவசாயிகளுக்கு வழங்காமல் வியாபாரிகளுக்கு கொடுத்து வருகிறார் இது முழுக்க முழுக்க வங்கி செயலாளராக இருக்கும் சுப்புலட்சுமி தான் செய்கிறார் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளோம். அதுபோல பொட்டலூரணி விளக்கில் கைமாக்ஸ் மின்விளக்கு பொருத்த வேண்டும் என்று மூன்று வருட காலமாக போராடி வருகிறோம் ஆனால் பொருத்தவில்லை.
அதுபோல தனியார் பேருந்துகளில் தூத்துக்குடி டு திருநெல்வேலி பேருந்துகளில் தனியார் பேருந்துகளில் வழங்கப்படும் டிக்கெட்டுகளில் எந்தவிதமான விபரங்களும் இருப்பது கிடையாது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுப்பது கிடையாது அதுபோல தூத்துக்குடி டு திருநெல்வேலி தனியார் பேருந்துகள் நேரடியாக அனுமதி வழங்கப்படவில்லை எல்லா தனியார் பேருந்துகளும் வெவ்வேறு கிராமத்தின் வழியாக திருநெல்வேலி செல்லும் வழித்தடம் தான் கொடுக்கப்பட்டுள்ளது
ஆனால் தனியார் பேருந்துகள் அதிகாரிகளுக்கு கவனிக்க வேண்டியதை கவனித்து விட்டு தூத்துக்குடி டு திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகிறது பேருந்து நிறுத்தத்தில் நிறுத்துவதும் கிடையாது என்ற குற்றச்சாட்டு தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கூறியுள்ளேன் என்று சமூக ஆர்வலர் சங்கரநாராயணன் கூறினார்.