தேசிய மக்கள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு சார்பாக நடைபெறும் மாதாந்திரக் கூட்டம் வருகின்ற 11-10-2026 ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று மதியம் 2:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் தாலுக்கா, காரமடை ஒன்றியம், கெம்மாரம் பாளையம் ஊராட்சிக்குட்பட்ட, தாயனூர், அண்ணாநகரில் அமைந்துள்ள, நமது அமைப்பின் மாநில மகளிர் அணி தலைவி திருமதி.ஆர். லோகநாயகி ஆசிரியர் (ஓய்வு) அவர்களின் இல்லத்தில்
மிக சிறப்பாக நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டம் நமது அமைப்பின் தேசிய செயலாளர் திரு. செந்தில்குமார் அவர்களின் தலைமையில் மாநில தலைவர் திரு. அந்தோணி ராஜ் மாநில மகளிர் அணி தலைவி
திருமதி.ஆர். லோகநாயகி மற்றும மாநில மகளிர் அணி செயலாளர் திருமதி. சி. மகேஸ்வரி ஆகியோர்களின் முன்னிலையில் கோவை மாவட்ட அமைப்பாளர் திரு. இப்ராஹிம் பாட்ஷா, மாவட்ட அமைப்பு செயலாளர் திரு. பாலசுப்பிரமணியம், மாவட்ட துணை அமைப்பாளர் திரு. நாகராஜ், கோவை வடக்கு மாவட்ட தலைவர் திரு. மோகனசுந்தரம், வடக்கு மாவட்ட அமைப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் அனைத்து பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்திற்கு நமது அமைப்பின் தேசிய தலைவர் டாக்டர். சின்னராஜ் ராமசாமி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மனித உரிமைகள் பற்றிய சிறப்புரை ஆற்ற உள்ளனர்.
ஆகவே அனைத்து மாவட்ட பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் இந்த கூட்டத்திற்கு தவறாமல் கலந்து கொள்ளுமாறு *நமது அமைப்பின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.