அரியலூரில் தெரு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்

அரியலூர் நகரத்தில் வியாபாரம் செய்து கொண்டிருந்த இடத்திலிருந்து கடை போட விடாமல் தெரு வியாபாரிகளை கடந்த சில நாட்களாக விரட்டி அப்புறப்படுத்துவதும் பொருட்களுடன் தள்ளு வண்டிகளை பறிமுதல் செய்வதும் என வயிற்றில் அடிக்கும் போக்கினை நகராட்சி காவல்துறை நெடுஞ்சாலை துறை ஆகிய துறைகள் இந்த செயலை கைவிட வலியுறுத்தி தெரு வியாபாரிகள் ஆர்ப்பாட்டம் அரியலூர் அண்ணா சிலை அருகே நடந்தது வியாபார குழு உறுப்பினர் மா காயத்ரி தலைமை தாங்கினார்

தமிழ்நாடு தெரு வியாபார தொழிலாளர் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் சி சந்திரகுமார் சிறப்புரையாற்றினார் மாவட்ட ஏ ஐ டி யு சி மாவட்ட பொதுச் செயலாளர் டி தண்டபாணி துணைத் தலைவர் தனசிங் விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட தலைவர் இரா உலகநாதன் விவசாயிகள் சங்க பொறுப்பாளர் ஜி ஆறுமுகம் ஏஐடியுசி மாவட்ட பொருளாளர் து பாண்டியன் மாவட்ட துணைத் தலைவர் தா காத்தவராயன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்

அரியலூர் நகர தெரு வியாபார தொழிலாளர்கள் வியாபார குழு உறுப்பினர்கள் முரளிகிருஷ்ணன் அருள்மணி முனியமுத்து மற்றும் சி பன்னீர்செல்வம் சரவணன் கனகவல்லி சாந்தநாயகி கொளஞ்சியப்பன் விஜயகுமார் சுரேஷ் மணிகண்டன் விஜி ராஜா ராசாத்தி பாப்பாத்தி லட்சுமி வேலாயுதம் செல்லதுரை கார்த்திக் தனபால் செழியன் கமலா சின்ன பொண்ணு கலியபெருமாள் ரஞ்சிதா ராணி கசந்தாமணி ராம்குமார் பெரியசாமி அழகேசன் செல்வி கணேசன் சேகர் தமிழரசி சுந்தரி சுதாகர் தனலட்சுமி சரஸ்வதி புவனேஸ்வரி அன்வர் உட்பட ஏராளமான தெரு வியாபார தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர் அரியலூர் நகர ஏஐடியூசி தெரு வியாபார தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இந்த ஆர்ப்பாட்டம் சுமார் 2 மணி நேரம் நடந்தது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *